ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகையாக 4000 ரூபாய் மற்றும் 15 பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் 743 பேருக்கு, நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நிவாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அர்ச்சகர்கள்,பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை 4000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
- #instanews
- #tamilnadu
- #erode
- #இன்ஸ்டாநியூஸ்
- #தமிழ்நாடு
- #ஈரோடு
- #கொரோனா
- #கொரோனாநிவாரணம்
- #திருக்கோயில்கள்
- #பூசாரிகள்
- #அர்ச்சகர்கள்
- #பட்டாச்சாரிகள்
- #பணியாளர்கள்
- #நிவாரணத்தொகை
- #நிவாரணப்பொருட்கள்
- #தமிழகஅரசு
- #அமைச்சர்முத்துசாமி
- #Corona
- # Coronarelief
- #Temples
- #Priests
- #Staff
- #Relief
- #Reliefitems
- # TNgovernment
- #ministermuthusamy
- #கோரிபாளையம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu