வாக்கு எண்ணும் மைய பணியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு: கலெக்டர் துவக்கி வைத்தார்

வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்பவர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை ஈரோடு கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக, சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியும், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக, கோபிச்செட்டிப்பாளையம் அரசு கலைக் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து, 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு, தொகுதிவாரியாக தனித்தனி பாதுகாப்பு இருப்பு அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்ளும் நுண்பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணிணி சுழற்சி முறையில் மாவட்ட கலெக்டர் கதிரவன், இன்று துவக்கி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!