புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்
X

ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் 

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் ரூ .200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம்

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்து கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிட்டு இயக்கப்படவில்லை. இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று முதல் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தாலும், துணிகள் தேக்கமடைந்து வருவதாலும் உற்பத்தியை நிறுத்தி உள்ளோம். கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ. 200 கோடி வரை மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!