ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..

ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..
X
தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதையடுதாது, 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 15ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பை ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!