விவசாயிகளுடன் புகுந்த சமூக விரோதிகள் -ஜிகே வாசன்

விவசாயிகளுடன் புகுந்த சமூக விரோதிகள் -ஜிகே வாசன்
X

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் சமூகவிரோத கும்பல் உள்ளே புகுந்து விட்டதாக ஈரோட்டில் ஜிகே வாசன் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பல முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உறவு ஏற்படவில்லை என்றும் சிலர் தவறான வழியில் விவசாயிகளை வழி நடத்தும் காரணத்தால் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் டெல்லியில் நேற்று நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்த வாசன் , அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் உள்ளே புகுந்து குடியரசு தினம் மற்றும் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் , இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றார். எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்ற அவர் , தேர்தலுக்காக நாடக அரசியலை செய்யக்கூடாது என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!