ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Erode news- வேளாளர் மகளிர் கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர்.
Erode news, Erode news today- ஈரோடு வேளாளா் மகளிர் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, பிஎஸ்சி டிகிரியில் புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டது.
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் கோலொச்சி கொண்டிருக்கும் டிசிஎஸ்(டாடா கன்சல்டன்சி சர்விசஸ்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வேலை வாய்ப்பு நாள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், டிசிஎஸ் நிறுவனத்தின் கல்வி கூட்டணி மற்றும் கல்வி இடைமுகத்திட்டங்களின் உலகளாவிய தலைவர் டாக்டர் கே.எம்.சுசீந்திரன் மற்றும் பிராந்திய தலைவர் ஸ்டீபன் மோசஸ் தினகரன் ஆகியோர் பங்கேற்று கல்லூரியில் ‘பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் காக்நிடிவ் சிஸ்டம்’ என்ற பாடப்பிரிவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
தொடர்ந்து, டாக்டர் சுசீந்திரன் பேசுகையில், டிசிஎஸ் நிறுவனத்தில் 2.6 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் உள்ளே வரும் ஊழியர்கள், ஒரே ஆண்டில் 7 லட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், 2023-2024ம் கல்வியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி ஆணை பெற்ற 74 மாணவிகளையும் மற்றும் அசன்ஜர், கேஜிஐஎஸ்எல் உள்ளிட்ட 25 நிறுவனங்களில் 1,266 பணி ஆணை பெற்ற மாணவிகளையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர் எஸ்.கே.ஜெயந்தி, வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர்கள் லோகநாதன், முனைவர் செல்வி, ராஜா, புதிய பாடப்பிரிவின் தலைவராக பொறுப்பேற்கும் முனைவர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu