ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி ஆண்டு விழா

Erode news- வேளாளர் மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 54ம் ஆண்டு விழா நடந்தது.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் 54வது ஆண்டு விழா, வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. வணிகவியல் தொழில் முறை கணக்குப்பதிவியல் இணைப் பேராசிரியர் விஷ்ணுவர்த்தனி வரவேற்றார். கல்லூரியின் செயலர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
உடுமலை ஆர்கேஆர் கல்வி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். திருச்சி பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மண்டல மேலாளர் சாமுவேல் ஸ்டீபன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் அனுராதா, மேலாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, சாதனை மாணவிகள் மூவருக்கு சாதனையாளர் விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். பல்வேறு அறக்கட்டளையின் சார்பில், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழக்கப்பட்டது.
மேலும், 25 ஆண்டுகள் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றியாமைக்காக, வேதியியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயா, கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் சதீஸ்குமார் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நுண்கலை மன்றத்தின் சார்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கணிதத்துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் பார்வதி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu