உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு மாணவர்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு மாணவர்

Erode news, Erode news today- உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு மாணவர்.

Erode news, Erode news today- நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சிலம்பம் - ஊசூ ஆகிய தகுதி தேர்வு ஈரோடு திண்டலில் நடைபெற்றது. இதில், ஈரோடு மாணவர் இடம்பிடித்தார்.

Erode news, Erode news today- நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சிலம்பம் - ஊசூ ஆகிய தகுதி தேர்வு ஈரோடு திண்டலில் நடைபெற்றது. வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், வி.இ.டி. ஐ.ஏ.எஸ். முதல்வர் ஆர்.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.லோகேஸ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். நோபல் உலக சாதனை நிறுவன முதன்மை செயல் அதிகாரி கே.கே.வினோத், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.ஜனனிஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் ஈரோட்டை சேர்ந்த டி.கோகுல்நாத்- ஆர்.பிருந்தா தம்பதியின் மகனும், 2-ம் வகுப்பு மாணவரான வி.ஜி.கிருத்திக் துரை தொடர்ந்து 2 மணிநேரம் சிலம்பம் சுற்றியும், ஊசூ தற்காப்பு கலையை செய்து காண்பித்து, சாதனை படைத்தார். இதனால் அவர் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். அவருக்கு பயிற்சியாளரும், ஊசூ சங்க மாநில துணைத்தலைவரும் ஈரோடு மாவட்ட செயலாளருமான ஆர்.கந்தவேல், துணை பயிற்சியாளர்கள் ஏ.மணி, எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story