ஈரோட்டில் 2வது நாளாக 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு

ஈரோட்டில் 2வது நாளாக 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
X

Erode news- கொளுத்தும் வெயில். (மாதிரி படம்)

Erode news- ஈரோட்டில் தொடர்ந்து 2வது நாளாக சனிக்கிழமை (இன்று) 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

Erode news, Erode news today- ஈரோட்டில் தொடர்ந்து 2வது நாளாக சனிக்கிழமை (இன்று) 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடைகாலம் தொடக்க நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. காலை 11 மணி முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. ஆனால் மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி பரான்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் நெருப்பின் அருகில் செல்வது போல் சுட்டெரித்து வருகிறது. கடந்த 14ம் தேதி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக ஈரோட்டில் 104.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், நேற்று (29ம் தேதி) ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. தொடர்ந்து, இன்றும் (30ம் தேதி) 2வது நாளாக 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால், பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும் போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வேறு வழியில்லாமல் ஒரு சிலர் மட்டுமே வந்து செல்கிறார்கள். மேலும், கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இரவு நேரங்களில் மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் தூங்குகிறார்கள். இதனிடையே, எப்போது இந்த தாக்கம் குறையும் என மக்கள் புலம்பி கொண்டு சென்று வருகிறார்கள்.

Tags

Next Story
ai solutions for small business