ஈரோட்டில் இன்று வெயிலின் அளவு மீண்டும் உச்சம்: 106.52 டிகிரியாக பதிவு

ஈரோட்டில் இன்று வெயிலின் அளவு மீண்டும் உச்சம்: 106.52 டிகிரியாக பதிவு

அதிகரிக்கும் வெயில்.

ஈரோட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் அவதி தொடர்கிறது.

ஈரோட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் அவதி தொடர்கிறது.

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீர், நுங்கு உள்ளிட்ட இயற்கை பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளித்து, உடலை குளிர்வித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று (3ம் தேதி) 106.16 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவான நிலையில், இன்று (4ம் தேதி) 106.52 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடையின் தொடக்க காலத்திலேயே 3 டிகிரி அதிகரிக்கும் ஜூன் மாதம் வரை இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story