ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு

ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
X

Erode news- ஈரோட்டில் கடும் வெயில் தாக்கத்தால் ஈரோடு - சத்தி சாலையில் சி.என்.சி கல்லூரி அருகே அனல் பறக்கும் கானல் நீர்.

Erode news- ஈரோட்டில் இன்று (ஏப்.26) 107.6 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியது.

Erode news, Erode news today- ஈரோட்டில் இன்று (ஏப்.26) 107.6 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியது.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 108 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 107.96 டிகிரி வெயில் பதிவானது. இதனால் வெயில் சுட்டு எரித்தது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) 107.6 டிகிரி வெயில் பதிவானது. இதனால், கடும் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் குடைகளை பிடித்து படியும், துணிகளால் தலையில் மூடிய படியும் சென்றனர். மேலும், வாகனங்களில் சென்றவர்களும் கடும் உஷ்ணத்தால் அவதிப்பட்டனர்.

இதனிடையே, வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அப்போது வெயிலின் தாக்கம் இதைவிடக் கொடுமையாக இருக்கும் என ஈரோடு மக்கள் இப்போதே புலம்பத் தொடங்கி விட்டனர்.

Tags

Next Story