Erode Power Shutdown | ஈரோட்டில் நாளை (ஜன.3) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

Erode Power Shutdown | ஈரோட்டில் நாளை (ஜன.3) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

ஈரோட்டில் நாளை (ஜனவரி 3) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நாளை (ஜனவரி 3) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில், நாளை (ஜனவரி 3) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வெட்டுக்காட்டு வலசு மின்பாதை (காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வி.ஜி.வலசு, வேணுபுரம், கிருஷ்ணா கார்டன், முனியப்பம்பாளையம், பாரதியார் நகர், எல்ஐசி நகர், கைகாட்டி வலசு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!