ஈரோட்டில் 12ம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோட்டில் 12ம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம் (பைல் படம்).

ஈரோடு மின் பகிர்மான வட்ட தெற்கு கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் ஈரோட்டில் நாளை மறுநாள் (12ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

Erode News, Erode Today News - ஈரோடு மின் பகிர்மான வட்ட தெற்கு கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் ஈரோட்டில் நாளை மறுநாள் (12ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (12ம் தேதி) புதன்கிழமை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் / வினியோகம்/ தெற்கு/ ஈரோடு கோட்ட அலுவலகத்தில் (948 ஈ.வி.என். சாலை, ஈரோடு-9) நடைபெற உள்ளது.

எனவே, அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அறச்சலுார், எழுமாத்துார். மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு. ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture