ஈரோடு: நடுப்பாளையம், பாசூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

ஈரோடு: நடுப்பாளையம், பாசூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X

பைல் படம்

மொடக்குறிச்சி அருகே உள்ள நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே.பாளையம், சோளங்கா பாளையம், ஆராம் பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம். கொளத்தப்பாளையம், செம்மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!