பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்..

பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்..
X

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).

ஈரோட்டில் பணம் வைத்து சீட்டாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 390 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சீட்டாடிய 7 பேர் கைது:-

ஈரோடு சாஸ்திரி நகர் சாலை மதுரை வீரன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அப்பகுதிக்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், ஈரோடு சாஸ்திரி சாலையை சேர்ந்த குழந்தை சாமி (62), அதே பகுதியை சேர்ந்த ராஜா (47), சூரம்பட்டியை சேர்ந்த எஸ்.குழந்தைசாமி (70), பொன்னுசாமி (67), அருணாச லம் (60),பெருமாள் (70), பூபதி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் 390 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற 8 பேர் கைது :-

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்க நேற்று போலீசார் ரோந்து மேற்கொண்டனர். இதில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இதயத்துல்லா (55), ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறத்தில் சுவர்ணலிங்கம் (47), கோபி மேவாணியில் மாரியப்பன் என்ற குமரேசன் (32), திங்களூரில் கருப்பன் (63), பெருந்துறை பவானி சாலையில் கண்ணன் (48), அரச்சலூர் ராக்கம்மாபுதூரில் விஜய் (25), சென்னிமலை காங்கயம் சாலையில் துரைசாமி (63), கருங்கல்பாளையம் பவானி சாலையில் அரவிந்த் (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 61 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இடையன்குட்டை டாஸ்மாக் கடை அருகே பெட்டிகடையில் மது அருந்த அனுமதித்ததாக அருள்பிரபு (31),காஞ்சிக்கோவில் தங்கமேட்டில் வறுவல் கடையில் மது அருந்த அனுமதித்தாக கருப்புசாமி (52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாய்க்காலில் ஆண் சடலம்:

பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் ஓடும் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். உடலை கைப் பற்றிய பெருந்துறை போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!