பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்: மஞ்சள் நீரில் குளித்த ஈரோடு மாநகரம்

Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா வந்த பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலத்தில் பூசாரிகள் கம்பங்களை தோளில் சுமந்தபடி ஆடி வந்ததையும், மஞ்சள் நீராட்டு விழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டதையும் படத்தில் காணலாம்.
Erode news, Erode news today- ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வல மஞ்சள் நீராட்டு விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் தெளித்து கொண்டாடினர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று (6ம் தேதி) சனிக்கிழமை நடந்தது. பெரிய மாரியம்மன் கோவில் கம்பம், மதியம் 2.30 மணிக்கு எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கம்பங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்று சேர்ந்தன. அதன்பின் மூன்று கம்பங்களும், பல்வேறு வீதிகள் வழியாக, இரவு காரை வாய்க்காலை சேர்ந்தது. மஞ்சள் நீர் தெளித்து ஆரவாரம்கம்பம் ஊர்வலத்தின் போது, வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கம்பங்களின் மீது, உப்பு, மிளகு கலந்து துாவி வழிபாடு செய்தனர்.
கம்பம் எடுத்தவுடன், மாநகரில் அனைத்து வீதிகளிலும், சிறுவர், சிறுமியர், பெண்கள், இளைஞர்கள் என, அனைவரும், ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்து, சந்தோஷம், ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடும் வகையில், ஈரோட்டில், அனைத்து நிறுவனங்கள், கடைகள், விடுமுறை விடப்பட்டது. மொத்தத்தில் மாநகரமே, மஞ்சள் நீரில் குளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu