/* */

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 31 பேர் போட்டி: சின்னம் ஒதுக்கீடு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சைகள் என மொத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 31 பேர் போட்டி: சின்னம் ஒதுக்கீடு
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் -2024.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சைகள் என மொத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 52 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் மாற்று வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 7 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 45 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நேற்று (சனிக்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில், 14 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, காவல் பார்வையாளர் ராமகிருஷ்ண சுவரண்கர், செலவின பார்வையாளர் லட்சுமி நாராயணா ஆகியோர் சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

அதன்படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்களின் விவரம் வருமாறு:-

1.கே.இ.பிரகாஷ் (திமுக) - உதயசூரியன்

2. அசோக்குமார் (அதிமுக) - இரட்டை இலை

3. கே.விஜயகுமார் (தமாகா) - மிதிவண்டி (சைக்கிள்)

4. மு.கார்மேகன் (நாம் தமிழர்) - ஒலி வாங்கி (மைக்)

5. ப.ஈஸ்வரன் (பகுஜன் சமாஜ்) - யானை

6. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) - வாயு சிலிண்டர்

7. ரா.குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) - தலைக்கவசம்

8. ரா.தண்டபாணி (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) - சிறு உரலும், உலக்கையும்

9. பா.தர்மராஜ் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - பலாப்பழம்

10. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) - ஆட்டோ ரிக்ஷா

11. கு.மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) - வெண்டைக்காய்

12. அ.தி.முனுசாமி (சாமானிய மக்கள் நலக் கட்சி) - மோதிரம்

13. அசோக்குமார் (சுயேச்சை) - குளிர்பதன பெட்டி

14. அமிர்தலிங்கம் (சுயேச்சை) - கரும்பு விவசாயி

15. ஆறுமுகா.ஏ.சி.கண்ணன் (சுயேச்சை) - திருகி

16. ஆனந்தி (சுயேச்சை) - பரிசு பெட்டகம்

17. கீர்த்தனா (சுயேச்சை) - மடிக்கணினி

18. குமரேசன் (சுயேச்சை) - பிரஷர் குக்கர்

19. கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - பானை

20. சண்முகம் (சுயேச்சை) - தென்னந்தோப்பு

21. சபரிநாதன் (சுயேச்சை) - தொலைபேசி

22. செந்தில்குமார் (சுயேச்சை) - சிலேட்டு

23. நரேந்திரநாத் (சுயேச்சை) - தொலைக்காட்சிப் பெட்டி

24. பிரசாத் சிற்றரசு (சுயேச்சை) -7 கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை

25. பிரபாகரன் (சுயேச்சை) - சீர்வளி சாதனம்

26. மயில்சாமி (சுயேச்சை) - கப்பல்

27. மயில்வாகனன் (சுயேச்சை) - படகோட்டியுடன் கூடிய பாய் மரப்படகு

28. மின்னல் முருகேஷ் (சுயேச்சை) - தீப்பெட்டி

29. ரவிச்சந்திரன் (சுயேச்சை) - வைரம்

30. ராஜேந்திரன் (சுயேச்சை) - டீசல் பம்ப்

31. வடுகநாதன் (சுயேச்சை) - கணினி.

Updated On: 31 March 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  2. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  3. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  4. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
  7. கல்வி
    கல்விக் கடன் பெறத் திட்டமிடும் மாணவர்களுக்கு முக்கியம்
  8. வீடியோ
    Stalin ஆட்சி - Kamarajar ஆட்சி Comparison பண்றதா ?#mkstalin #dmk...
  9. கிணத்துக்கடவு
    மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    சப்பாத்தியை இனிமேல் நெய்யுடன் சாப்பிடுங்க!