குடும்ப தலைவிக்கு ரூ.1,000 அடுத்த மாதம் பட்ஜெட்டில் அறிவிப்பு; தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி
Erode news, Erode news today- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு சம்பத் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்.
Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் .ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். தற்போது சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது,
திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈவிகே சம்பத். ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.புதுச்சேரியில் அடிபட்டு கிடந்த கருணாநிதியை பெரியார் அரவணைத்தார். ஈவிகே சம்பத் மகனுக்காக, கருணாநிதியின் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
மறைந்த திருமகன் ஈவெரா தொகுதி வளர்ச்சி, மக்கள் பிரச்சினைக்கு பேரவையில் குரல் கொடுத்தார். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu