/* */

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி; ஏப்ரல் 5-ல் தொடக்கம்

Erode news, Erode news today- ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் நடைபெறும், அழகுக்கலை இலவசப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி; ஏப்ரல் 5-ல் தொடக்கம்
X

Erode news, Erode news today- கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

Erode news, Erode news today- ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் நடைபெறும், இலவச அழகுக்கலை பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில், பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை 30 நாள்கள் நடைபெறவுள்ளன. தற்போது, இதற்கான முன்பதிவு நடக்கிறது.

பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2 ஆம் தளத்தில் இப்பயிற்சியானது வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 878323213,7200650604 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 March 2023 5:45 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...