ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

க்ரைம் செய்திகள் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொகுப்பை க்ரைம் செய்திகளாக இங்கு காண்போம்.

அதிகமாக மது குடித்தவர் பலி:-

கோபியை அடுத்துள்ள கே.என்.பாளையம், தெம்பினி காலனியை சேர்ந்தவர் வீரமணி (42). இவரது மனைவி செல்வி (37). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையான வீரமணி வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல மனைவியிடம் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீரமணி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடப்பதாக செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, செல்வி அங்கு சென்று கணவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர் பரி சோதனையில், வரும் வழியிலேயே வீரமணி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து, செல்வி நேற்று அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூச்சு திணறி மூதாட்டி பலி:-

கொடுமுடி அருகே உள்ள அறச்சலூர், தெற்கு வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (35). இவரது தாயார் புஷ்பம் (62). கடந்த 3 ஆண்டாக புஷ்பத்துக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளன. இந்நிலையில், புஷ்பத்துக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே புஷ்பம் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து, அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை:-

ஈரோடு சூரம்பட்டிவலசு, சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் பூவாத்தாள் (66), பழ வியாபாரி. பூவாத்தாளின் மகன் வெங்கடாசலம் (43), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகனுடன் தாய் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தார். வெங்கடாசலத்துக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த வெங்கடாசலம் நேற்று முன்தினம் வீட் டில் சேலையால் தூக்கு போட்டு. தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வெங்கடாசலம் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, தாய் பூவாத்தாள் நேற்று அளித்த புகாரின் பேரில், ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசா ரித்து வருகின்றனர்.

விஷம் குடித்த பெண் பலி:-

பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல் (36). இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வந்தார். சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டாக வயிற்று வலி மற்றும் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுகன்யா, கடந்த ஜனவரி 24ம் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த, சுகன்யாவின் அக்கா சத்யா உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா நேற்று உயிரிழந்தார். இது குறித்து, பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்