'பயணம் பாதியில் முடிந்த சோகம்' - பள்ளிக்கு வேனில் சென்ற மாணவன் பலி

Erode news, Erode news today- மாணவன் திவாகர்.
Erode News Today-மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி (இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பவானி அருகே கோனேரிப்பட்டி பகுதியில் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து திவாகர் என்ற 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவனின் உடலை மீட்டு அம்மாபேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி தங்கமணி. இவர்களின் மூத்த மகன் திவாகர் (வயது 13). இவர், பூதப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து இன்று காலை, பள்ளி வேனில், பள்ளிக்கு திவாகர் சென்று கொண்டிருந்தார். வேனில் ஏறிய மாணவர் திவாகர், முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி வேன் கோனேரிப்பட்டி பேரேஜ் அருகே சென்று கொண்டிருந்தது,
அப்போது, டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில், படியில் நின்று பயணம் செய்த மாணவர் திவாகர், நிலைதடுமாறி வேனில் இருந்து முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் அந்த இடத்திலேயே மாணவர் திவாகர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி, கூச்சல் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்திய, பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, இறந்து கிடப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து, கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வேனில் பயணித்த மற்ற மாணவர்கள், மாற்று வேனில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவன் அதே வேனின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu