ஈரோடு எம்பிக்கு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் பாராட்டு

ஈரோடு எம்பிக்கு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் பாராட்டு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு எம்பி பிரகாஷ் பாராட்டி கவுரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாசுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நேற்று (6ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாசுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நேற்று (6ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 10வது செயற்குழு கூட்டம் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாசுக்கு பாராட்டு விழா நேற்று (6ம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஈரோடு டெக்ஸ்டைல் டிரேடர்ஸ் சங்க முன்னாள் தலைவர் அசோக்குமார் கல்ரா முன்னிலை வகித்தார். இணை செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.


இதில், கூட்டமைப்பின் கவுரவ உறுப்பினரான கே.இ.பிரகாஷ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு கூட்டமைப்பின் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறி, பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் அரிசி போன்ற தானியங்களின் மூட்டைகள் 25 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் வரி இல்லை. 25 கிலோவிற்கும் குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற விதியையும், உலர் பழங்களுக்கும், வெண்ணெய் நெய்க்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உள்ளதை, 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதலாக 2 நடைமேடை அமைத்து விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் முன்னதாக ஈரோடு சொக்கநாத வீதி வியாபாரிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்றார். முடிவில், கூட்டமைப்பின் இணை செயலாளர் ஜிப்ரி நன்றி கூறினார். இதில், கூட்டமைப்பின் அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story