ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா; மஞ்சள் ஏலத்துக்கு 9 நாள் விடுமுறை

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா; மஞ்சள் ஏலத்துக்கு 9 நாள் விடுமுறை
X

பைல் படம்.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஈரோடு மஞ்சள் மார்க்கெட் ஏல விற்பனைக்கு 9 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஈரோடு மஞ்சள் மார்க்கெட் ஏல விற்பனைக்கு 9 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1,2ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாகும்.

அதைத்தொடர்ந்து, 5ம் தேதி பொங்கல் விழா நடைபெறவுள்ளது. எனவே, 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை மஞ்சள் மார்க்கெட் ஏல விற்பனைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 8, 9ம் தேதி கள் சனி, ஞாயிற்றுக்கிழமையாக வருவதால் அது வழக்கமான விடுமுறையாகும். எனவே, வருகிற 1 முதல் 9ம் தேதி வரை 9 நாட்களுக்கு மஞ்சள் மார்கெட்டுக்கு விடுமுறையாகும். வருகிற 10ம் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும்.

Tags

Next Story