ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி 30வது ஆண்டு விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி 30வது ஆண்டு விழா
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் 'கொங்கு தமிழினி' சாந்தாமணி கலந்து கொண்டு பல்வேறு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 30வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 30வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 30வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் ஆண்டறிக்கை வாசித்தார். பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் குமாரசுவாமி தலைமை உரை ஆற்றினார்.


அறக்கட்டளையின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தேவராஜா, பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் வெங்கடாசலம், அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர்கள் சச்சிதானந்தன், கார்த்திகேயன், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாற்கு சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர் 'கொங்கு தமிழினி' சாந்தாமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் , அவர் பேசுகையில், மாணவர்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பேணிக் காப்பதோடு பெற்றோர்களை மதித்து நடப்பதே சமுதாயத்திற்குச் செய்யும் சேவை என்றும் பேசினார். பின்னர், கல்வி, கலை, தனித்திறன்கள் என பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கியதோடு, ஆசிரியர்கள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.


விழாவின், ஒருங்கிணைப்பாளர் குமரகுரு நன்றியுரை வழங்கினார். முன்னதாக, மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !