/* */

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு

Erode news- மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று வர்ண பகவானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
X

Erode news- மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்குள் இறங்கி சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.

Erode news, Erode news today- மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று வர்ண பகவானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும் உள்ளனர்.

இந்தநிலையில், மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் சிவாச்சாரியார்கள் வர்ண பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது வர்ண பகவானை வேண்டி மந்திரங்கள் கூறினர். அதன் பிறகு காவிரி ஆற்றில் 21 சிவாச்சாரியார்களும் இறங்கி வழிபாட்டை தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் நின்றபடி மந்திரம் கூறினர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2024 10:00 AM GMT

Related News