ஈரோடு கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா

ஈரோடு கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா

கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழாவையொட்டி, மாறுவேட போட்டி நடைபெற்றது.

ஈரோடு கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 16ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 16ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் உள்ள கலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்ற நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி ஆண்டு விழா நடைபெறுவது. அதன்படி, பள்ளியில் 16ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர்.ரூபா அச்சுதன் மற்றும் நிர்வாக இயக்குனர் சபாநாயகம் ஆகியோர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் காலை ப்ரீ கேஜி முதல் எல்கேஜி வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற குழு நடனம், நாடகம், மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story