ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம்

Erode news- நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றியதாக வைரலான வீடியோ காட்சி.

Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் மாற்றியதாக எழுந்த புகாரில் தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் தூய்மை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு இறங்கிய குளுக்கோஸ் (டிரிப்ஸ்) தீர்ந்து விட்டதையடுத்து, அந்த தூய்மை பணியாளர் நோயாளியின் குளுக்கோஸ் பாட்டிலை மாற்றினார்.

இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது. அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை தவிர வேறு யாரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நாளில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் விஜயகுமாரை தனியார் ஒப்பந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Tags

Next Story