ஈரோட்டில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 8வது பிரிதிநிதிகள் பேரவைக் கூட்டம்
Erode News- அரசு அனைத்துத் துறை அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.
Erode News, Erode News Today- ஈரோட்டில் அரசு அனைத்துத் துறை அரசு ஓய்வூதியர் சங்கத்தின் 8வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள கூடலிங்கத் திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 8வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதை போல மருத்துவப் படி ஆயிரம் ரூபாயாக தமிழக அரசு வழங்க வேண்டும். அனைத்து வியாதிகளுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் காசில்லா மருத்துவம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
காசில்லா மருத்துவம் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட பணிக்கொடை பிடித்தம் செய்யும் காலத்தை 12 ஆண்டாக குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு சென்னையை போல, அனைத்து மாவட்டங்களிலும் சலுகை முறையில் பஸ் பாஸ் வழங்க வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும். போக்குவரத்து, மின் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் ஹரிதாஸ், நிர்வாகிகள் பிரசன்னா, சுப்பிரமணியன், கதிர்வேல், சந்திரசேகரன் உள்ளிட்ட ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu