ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த டீலக்ஸ் அறை படுக்கைகள்

ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த டீலக்ஸ் அறை படுக்கைகள்
X

Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் உள்ள டீலக்ஸ் அறைகள்.

Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டணப் படுக்கைகள் கொண்ட அறைகள் பயன்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டணப் படுக்கைகள் கொண்ட அறைகள் பயன்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:-

தமிழக முதலமைச்சரால் ஈரோடு தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு உயர் சிகிச்சைக்காக 8 மாடி கட்டிடம் கடந்த மார்ச் 13ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற 20 படுக்கைகள் கொண்ட கட்டண சிகிச்சை பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

உஷாரா இருங்க விஜய் சேதுபதி..! அட்வைஸ் தரும் பொதுமக்கள்..!


தற்பொழுது கட்டண பிரிவு பயன்பாட்டில் உள்ளது. நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தனி அறை (டீலக்ஸ் அறை)- ரூ.2 ஆயிரம், இரு படுக்கை அறை (டபுள் டீலக்ஸ் அறை)- ரூ.1,000, 3 படுக்கை அறை (டிரிபிள் டீலக்ஸ் அறை )-ரூ. 700, மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை, உணவு ஆகியவை தனி கட்டணம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு குரு பிரசாத் 9150318361, வஞ்சி வேந்தன் 938580845 என்ற எண்களில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்ட அட்டை (NHIS) வைத்திருந்தால் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil