ஈரோடு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணைய வழியாக விண்ணப்பிக்கும் தேதி வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில், வெளியிட்ட அறிக்கை, ஈரோடு மாவட்டம் கோபி (பெரிய கொடிவேரி) மற்றும் ஈரோடு (காசிபாளையம்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் பயிற்சி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையவழி கலந்தாய்விற்காக இணையவழி (www.skilltraining.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : ஆர்கள் 14 - 40 / பெண்கள் : வயது வரம்பு இல்லை ).
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் டெக்னீசியன், டர்னார், மெஷினிஸ்ட், கோபா, ட்ராப்ட்மோர் சிவில், மற்றும் டெக்ளப்டைல் வெட் ப்ராஸாஸிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் மற்றும் ஓயர்மேன் தொழிற்பிரிவிலும், TATA Technology நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான அட்கவாகள்ளப்டு CNC மிஸினிங் டெக்னீஸியன் - 2 வருடம், மேனுபேக்ச்சரிங் கண்ட்ரோல் & ஆட்டோமேசஸ் -1 வருடம், இன்டஸ்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீஸியன் -1 வருடம், பேசிக் டிசைனர் மற்றும் விர்ச்சுவல் வெரிடையர் - 2 வருடம், போன்ற தொழிற்பிரிவிலும், அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்ந்து பயில் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை நேரில் அணுகலாம்.
பயிற்சியில் சேரும் மாணவ மாணவியருக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, தமிழக அரசான் மாதம் ரூ.750/- உதவித் தொகை, புதுமைப்பெனர் திட்டத்தில் தகுதியான பெண் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி, மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பெரிய கொடிவேரி, கோபிசெட்டிபாளையம், மற்றும் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு காசிபாளையம்) அவர்களை நேரிலோ அல்லது 94990 55705, 04258-233234, 0424-2275244 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu