ஈரோடு: ஜம்பையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு

ஈரோடு: ஜம்பையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு
ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் ஜம்பையில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜம்பையில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நேற்று ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பவானி வட்டாசியர் தியாகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், செந்தில், ஆனந்தகுமார் ஆகியோர் ஜம்பை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் 100 சதவீத வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பொதுமக்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story