ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ந் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15ம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஈரோடு புறநகர் மாவட்டத்திலும், 17-ஆம் தேதி ஈரோடு மாநகர் மாவட்ட பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று மாவட்டம் முழுவதும் 67மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் திரண்டு வந்து இடம் பிடித்தனர். பின்னர் டோக்கன் அடிப்படையில் 100 பேருக்கு ஒவ்வொரு மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை கூடுதலாக தடுப்பூசிகள் வர உள்ளதால் நாளை மீண்டும் மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களில் தடுப்பு ஊசிகள் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி போடப்படாத இது பற்றி அறியாத மக்கள் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதால் மையங்களில் மட்டும் தடுப்பூசி போடாமல் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்