ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில் குவிந்த மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில் குவிந்த மக்கள்
X

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். 

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள 68 மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்புக்கு தகுந்தாற் போல் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டு டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தட்டுபாடு காரணமாக, கடந்த சில நாட்களில்,தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்திற்கு 10 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் வந்தடைந்தன. இதனை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 68 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மக்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் மையத்திற்கு முன் குவியத் தொடங்கினர். மையங்களில் வழக்கம்போல டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஒரு சில மையங்களில் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. இன்று மாவட்டம் முழுவதும் கோவிஷில்டு தடுப்பூசியே போடப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்