ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான வரவேற்பா?
கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது கேள்விகுறியானது
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் குறைந்ததன் காணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மீன் கடைகள், இறைச்சி கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மீன் கடை, இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை, ரங்கம்பாளையம் கொல்லம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மீன் கடைகள், மட்டன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் குவியத்தொடங்கினர். மீன் கடைகளில் ரோகு, கட்லா, ரூபா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் அதிக அளவில் இன்று விற்பனையானது.
இந்நிலையில் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேசமயம் சமூக இடைவெளி என்பது கேள்விகுறியானது. சிலர் தங்களது முக கவசங்களை வழக்கம் போல் கழுத்துக்கு போட்டு வந்துள்ளனர். கொரோனாவின் 2ம் அலையில் தாக்கமே இன்னும் முடிவு பெறதா நிலையில் பொதுமக்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்கும் விதமாக இப்படி அதிகளவில் ஒன்று கூடுவது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் தாங்களாகவே உணர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu