பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்
X
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி சிப்பத்தை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி செய்யக்கோரி ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் , தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று அமைச்சர் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் இலவசமாக அரிசி சிப்பத்தை வழங்கினார்.

Tags

Next Story
ai marketing future