நாளை இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

நாளை இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
X
நாளை தடையை மீறி மீன், இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கால் சனிக்கிழமை அன்று மீன், கோழி, மட்டன் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஈரோடு மாநகரப் பகுதியில் ஸ்டோனி பிரிட்ஜ் அருகே செயல்படும் மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவியத் தொடங்கி விடுகின்றனர். பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்து வந்தாலும் சமூக இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளது. இதேபோல் மட்டன், கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதைத்தொடர்ந்து சனிக் கிழமைகள் அன்றும் மீன், கோழி, மட்டன், உள்பட இறைச்சி கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசு ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது. இதையடுத்து அரசு சனிக் கிழமைகள் அன்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நாளை அனைத்து வகையான இறைச்சி கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே தடை உத்தரவை மீறி நாளை எங்காவது இறைச்சி கடைகள் செயல்படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகர் பகுதியில் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!