ஈரோடு : 24 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு லேப்டாப் வழங்கல்

ஈரோடு : 24 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு லேப்டாப் வழங்கல்
X
ஈரோடு மாவட்டத்தில், 24 போலீ்ஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்களிடம் எஸ்பி தங்கதுரை, லேப்டாப் வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்திட கடந்த வாரம் போலீசாருக்கு 24 டூவீலர்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணைகளையும், கோப்புகளையும் எளிதாக கையாள்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு 24 லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்பி தங்கதுரை, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 24 போலீ்ஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்களிடம், லேப்டாப்களை வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!