ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

ஈரோட்டில், எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளிகள் தேடி வருகின்றனர்.

ஈரோடு பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52). இவர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதமாக பிபி அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்தாக கூறப்படுகிறது. இவர், நேற்று இரவு காவிரி ஆற்றங்கரையில் உள்ள நஞ்சப்பா நகர் சுடுகாடு அருகே உள்ள நிழல்குடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அடையாளம் தெரியாத நபர் ஹசேன் தலை மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். மேலும் அடையாமல் தெரியாமல் இருப்பதறகாக, சடலத்தை பிரேதத்தை எரித்துள்ளனர்.

அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை பார்த்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் கொலை நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!