ஈரோட்டில் தடுப்பூசி போட ஆர்வம் - கொட்டும் மழையில் குடையுடன் காத்திருந்த மக்கள்

ஈரோட்டில் தடுப்பூசி போட ஆர்வம் - கொட்டும் மழையில் குடையுடன் காத்திருந்த மக்கள்
X

ஈரோடு, வைராபாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள தடுப்பூசி முகாம், கொட்டும் மழையில் நேற்றிரவே வரிசையில் காத்திருந்த மக்கள்.

ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் நால்ரோடு பகுதியில், இன்று தடுப்பூசி போடப்படும் நிலையில், இரவிலேயே கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை உணர்ந்துள்ள மக்கள், தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக தடுப்பூசி செலுத்துவது எளிமையாக்கும் வகையில் மூன்று கட்டங்களாக சுழற்சி முறையில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் அடிபபடையில் இன்று ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி, தாளவாடி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள 100மையங்களில் 9ஆயிரத்து 500 கோவிசீல்டு தடுப்பூசிகளும் 500 கோவாக்சின் தடுப்பூசிகளும் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வைராபாளையம் நால்ரோடு பகுதியில், நேற்றிரவே தடுப்பூசி முகாம் முன்பு மக்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது; கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், குளிரிலும் குடை பிடித்தப்படி தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால், தடுப்பூசி போட வரும் மக்கள் பாதிப்படையாமல் இருக்க, தற்காலிக பந்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!