கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவியும் மக்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி பயன்பாட்டிற்க்கு வந்துள்ளன. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான அரசு தனியார், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 80 மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணை நோயால் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் போடப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அரசு, ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியும் போட்டுக் வருகின்றனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோசும்,இரண்டாம் டோசும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து டோக்கன் அடிப்படையில் காலையிலே நீண்ட வரிசையில் சமூக இடைவெளி கடைபிடித்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். கோவேக்சின், கோவிஷில்டு இரண்டு தடுப்பூசியும் போடபட்டு வருவதாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu