சொந்த ஊர் செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டம்

சொந்த ஊர் செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டம்
X
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் கடந்த மே.10ம் தேதி முதல் வரும் 24ம் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் ஊரடங்கை நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசு ஊரடங்கினை வரும் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. மேலும் முழு ஊரடங்கின் காரணமாக பொது மக்கள் நலன் கருதி இன்று இரவு 9-00 மணிவரையிலும், நாளை காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கியது. அந்த அறிவிப்பின்படி ஈரோட்டில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் தயாராக உள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், வெளியூர் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கும் வந்த வண்ணம் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!