ஈரோட்டில் 1000 பவுன் நகையுடன் அடகு கடை உரிமையாளர் ஓட்டம்
ஈரோட்டில் நகை அடகு கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் மற்றும் சரவணன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஆஞ்சநேயா நகை அடகு கடை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சுமார் 1000 சவரன் தங்க நகையை அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கடையை பூட்டிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வடக்கு காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே கடையின் பங்குதாரரான சரவணனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் சரவணணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 1000 சவரன் நகையுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu