அம்மா உணவகங்களில் பார்சலில் உணவு விநியோகம்...

அம்மா உணவகங்களில் பார்சலில் உணவு விநியோகம்...
X
ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், பார்சல்களில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநேர ஊரடங்கும் பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முழு ஊரங்கிலும் வழக்கம் போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்றும், பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் மாநகர் பகுதியில் மட்டும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, சூளை, சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கொல்லம்பாளையம் உட்பட 13 இடங்களில் அம்மா உணவகங்கள் இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்தன.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக, உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. மாறாக பார்சல் மட்டும் உணவு வழங்கப்பட்டது. யாரும் உணவகங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாசலில் உணவக ஊழியர்கள் நின்று பார்சலில் உணவுகள் வாங்கினர். அம்மா உணவகங்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் மற்ற உணவகங்களும் வழக்கம்போல் இயங்கினாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பார்சலில் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல், காலை 10 மணி வரையும்; மதியம் 12 மணி முதல், பகல் 3 மணி வரையும்; இரவு 7 மணி முதல், இரவு 9 மணி வரையிலும் உணவகங்களில் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படுகிறது. எனினும், இன்று முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான உணவகங்கள் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil