ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி : ஈரோடு மாவட்டத்தில் நாளைய முகாமில் இலக்கு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நான்காம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.ஜெ.சிங், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர். நாளை நடக்கவுள்ள தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story