ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள், கலெக்டர் வரவேற்பு..!

ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள், கலெக்டர் வரவேற்பு..!
X
ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் வரவேற்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று இரவு ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , முத்துசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் கதிரவன் வரவேற்றனர்.பின்னர் விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி போன்ற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 10,000 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!