முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டு கூடுதலாக 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் கூடுதலாக 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஸ்வஸ்திக்கார்னர், மேட்டூர் ரோடு, சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு,ஜி எச் ரவுண்டானா, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் என மக்களுக்கு அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்களை போலீசார் அனுமதித்தனர்.

இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன.

பவானி லட்சுமி நகர் சோதனைச்சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி மாநில எல்லை சோதனை சாவடிகளில் செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. முழு ஊரடங்கி மீறியும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாலிபர்களை தேவையில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!