கட்டிடப்பணிகளை கண்காணிக்க பறக்கும்படை : அமைச்சர் முத்துசாமி

அரசு அனுமதிபடி கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் 30.85 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டும் பணி மற்றும் வைரம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் 3.41 ஏக்கர் நிலத்தில் அடர்வன திட்டத்தின் கீழ், மியாவாக்கி முறையில் மரங்களை நடும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ளை சந்தித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிடத்திற்கான அனுமதி 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணிகளை கண்காணிக்க பறக்கும் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் சாய சலவை நீர் கலப்பது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாய சலவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் கலக்காமல் இருக்கவும் அதே சமயம் அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளார்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சோலார் பகுதியில் புதிதாக மத்திய பேருந்து அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வழி பொறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு மாற்று இடம் அமைத்து தந்த பின்னரே அவர்களை அப்பகுதியிலிருந்து காலி செய்ய அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி.கணேசமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!