ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி, கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!

ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி,  கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!
X
ஈரோட்டில் லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் குற்றச் சம்பவம் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எடுத்து வருகிறார். அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனை, கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீட்டுக் கட்டுகள், 21.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 1.5 பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 850 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இனி வரும் காலஙகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!