ஈரோடு:கொரோனா தடுப்பூசி தீர்ந்ததால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

ஈரோடு:கொரோனா தடுப்பூசி தீர்ந்ததால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
X

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறியதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை எனக்கூறியதால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநராட்சிக்குட்பட்ட மரப்பாலம் அருகேயுள்ள சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் கொரோனா தடுபபூசி கிடைக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போதிய இருப்பு வைக்காமலும் முறையான தகல்களை தறாமல் அலைய விடுவதாகவும் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கூடிய விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!