ஈரோடு: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த 4 பேர், ஈரோடு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்று அதிகாலை வந்த மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஈரோடு ரயில்வே போலீசார் பெட்டிகளை கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக ஏ-1, எஸ்-9 பெட்டிகளில் பயணித்த 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து, உடமைகளை பரிசோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபாட்டில்களை கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியனர்.

இதில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் மஜித் ரோடு 5வது வீதியை சேர்ந்த ராஜாமணி மகன் செரிப் (28), கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமார் நகரை சேர்ந்த முத்துசாமி மகன் செந்தில் (37) என்பது தெரியவந்தது. பின்னர், 2பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 68 கர்நாடகா மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், நேற்று பெங்களூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகா மதுபாட்டில்களை கடத்தி வந்த கர்நாடகா மாநிலம் பங்கர்பேட்டை சுபாஷ் நகரை சேர்ந்த முருகேஷ் மகன் சுதர்சன் (28), அதேபகுதியை சேர்ந்த பாலசுப்பையா மகன் ஸ்ரீநாத் (39) ஆகிய 2பேரையும் ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 145 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!